பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு நாள் நடிப்பதற்கு ரோஷினி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த சீரியல் பாரதி கண்ணம்மா.
மக்களிடம் இருந்து கிடைத்த ஆதரவினால், இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் தேடி வந்துள்ளது.
உதாரணமாக இந்த சீரியலில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்த அகிலனுக்கு பட வாய்ப்புகள் அதிகம் வந்ததால், இந்த சீரியலில் இருந்து விலகினார்.
அதை தொடர்ந்து வில்லி வெண்பா வாக நடிக்கும் பரினா, பிரசவத்திற்காக இந்த சீரியலை விட்டு விலகவுள்ளார்.
அதே போல் கதாநாயகி கதாநாயகி ரோஷினியும் பட வாய்ப்பு வந்துள்ள காரணத்தினால் சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் இந்த பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த போது, ஒரு நாள் சம்பளமாக ரூ. 15,000 வாங்கியுள்ளாராம் நடிகை ரோஷினி என தகவல் வெளியாகியுள்ளது.