ஆஸ்கார் ரேஸில் நுழைந்த RRR படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்
RRR
ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் அதிகம் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை பார்த்த ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் அது பற்றி பேசி இருந்தார்கள்.
RRR தான் இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு அதிகாரபூர்வ பரிந்துரையாக அனுப்ப வேண்டும் ரசிகர்கள் கேட்டு வந்தார்கள். இருப்பினும் ஒரு குஜராத்தி படம் தான் தேர்வானது. இது RRR ரசிகர்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆஸ்காரில் RRR
இந்நிலையில் தற்போது படக்குழுவினர் தனியாக இந்த படத்தை General categoryல் சேர்க்க அப்ளை செய்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.
தயாரிப்பு நிறுவனமே இதை தெரிவித்து இருக்கிறது. சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு RRR படத்தில் பணியாற்றிய நட்சத்திரங்கள் நாமின்டே ஆவார்கள் என தெரிகிறது.
Also Read: வெளியாகும் முன்பே கார்த்தியின் சர்தார் திரைப்படம் செய்துள்ள பெரிய வசூல், இத்தனை கோடி தெரியுமா?
