RRR படத்திற்கு கர்நாடகத்தில் கிளம்பிய எதிர்ப்பு: தமிழ் மொழி தான் காரணம்
ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் வரும் 25ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது கர்நாடகத்தில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அதற்கு தமிழ் மொழி தான் காரணம்.
ஆர்ஆர்ஆர்
ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் மெயின் ரோலில் நடிக்க, ஆர்ஆர்ஆர் படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கான் உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கின்றனர்.
மொத்தம் ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகிறது ஆர்ஆர்ஆர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தியில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
கர்நாடகத்தில் எதிர்ப்பு
கர்நாடகத்தில் கன்னட டப்பிங் ஆர்ஆர்ஆர் வெர்சனுக்கு அதிகம் தியேட்டர்கள் ஒதுக்கவில்லை என எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு வந்திருக்கிறது.
#BoycottRRRinKarnataka ஹாஷ் டேக் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.