ஆர்ஆர்ஆர் தாமதத்தால் கடும் நஷ்டம்! இத்தனை கோடியா? ஹீரோ சம்பளத்தை குறைக்கும் ராஜமௌலி
ஆர்ஆர்ஆர் பட ரிலீஸ் இதற்கு முன் பல முறை தள்ளிப்போய் இறுதியாக ஜனவரி 7ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக தியேட்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாலும் ஞாயிறு லாக்டவுன் போடப்பட்டதால் படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனது.
நேற்று ஆர்ஆர்ஆர் புது ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. மார்ச் 18ம் தேதி அல்லது ஏப்ரல் 28ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் படம் தொடர்ந்து தாமதம் ஆனதால் 150 கோடி ருபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது என்றும், இதனால் ராஜமௌலி கடும் பிரச்சனையில் இருக்கிறார் என கூறப்படுகிறது.
இதனால் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் சம்பளத்தை விட்டுக்கொடுக்க அவர் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இரண்டு ஹீரோக்களுக்குமே தலா 65 கோடி ருபாய் சம்பளம் பெறுகின்றனர். அதன் ஒரு பகுதி படத்தின் ரிலீசுக்கு பிறகு தான் தரப்பட இருக்கிறது என்றும், நஷ்டத்தை தவிர்க்க அதை விட்டுக்கொடுக்க கேட்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
லண்டனில் இருந்து சரக்கு விமானத்தில் ரகசியமாக வெளியேற்றப்பட்ட அமெரிக்க தூதர்: அவரின் பின்னணி News Lankasri
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu