RRR படம் ரிலீஸ் முன்பே டிஜிட்டல்-சாட்டிலைட் மூலம் இத்தனை கோடி வசூலித்துவிட்டதா?
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். அவரது இயக்கத்தில் கடைசியாக 2.0 வெளியானது, அதன்பிறகு எந்த படங்களும் வெளியாகவில்லை.
இவரைப்போலவே தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது எஸ்.எஸ். ராஜமௌலி தான். பாகுபலி படத்தை தொடர்ந்து அவர் RRR என்ற படத்தை இயக்கியுள்ளார்.
RRR படத்தின் விவரம்
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய இப்படம் மார்ச் 2018ம் ஆண்டு சின்ன போட்டோ ஷுட்டுடன் தொடங்கியுள்ளது. பின் 2019ம் ஆண்டு ஹைதராபாத்தில் பெரிய செட்டில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.
தொடர்ந்து இந்தியாவில் பல இடங்களில் படப்பிடிப்பு நடக்க உக்ரைன், பல்கேரியா போன்ற இடங்களிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 2020 ஜுலை 30ம் தேதி வெளியாவதாக இருந்தது, ஆனால் கொரோனா பிரச்சனை ரிலீஸ் அப்படியே தள்ளிப்போனது. இந்த வருட ஆரம்பத்தில் ரிலீஸ் ஆகும் என்று பார்த்தால் அதுவும் நடக்கவில்லை, தற்போது மார்ச் 25ம் தேதி பட ரிலீஸ் என்று கூறியுள்ளார்.
படக்குழு
படத்தில் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் முக்கிய வேடத்தில் நடித்தாலும் பாலிவுட் நடிகர்களான ஆலியா பட், அஜட் தேவ்கன் என பலர் நடித்துள்ளனர். எனவே இப்பட புரொமோஷனில் ராம் சரண், என்.டி.ஆருடன் ஆலியா பட்டும் கலந்துகொண்டு படத்தை புரொமோட் செய்தார்.
டிஜிட்டல், சாட்டிலைட் ரைட்ஸ்
படம் 400 கோடி பட்ஜெட்டில் தயாரானது என்பது நமக்கு தெரியும். படம் ரிலீஸ் முன்பே டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் மூலம் ரூ. 325 கோடி வசூலித்துள்ளதாம்.
சொந்தமாக விமானம் வாங்கி வைத்திருக்கும் இந்திய நடிகர்கள்! யார் யார் தெரியுமா? முழு லிஸ்ட்