கோல்டன் க்ளோப் விருதில் RRR! இத்தனை பிரிவுகளில் தேர்வாகி இருக்கிறதா
RRR
எஸ்எஸ் ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் இந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. அது மட்டுமின்றி படம் நெட்பிலிக்ஸில் வெளியான பிறகு அதற்கு உலக அளவில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.
ஹாலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் RRR படத்தை பார்த்துவிட்டு ராஜமௌலியை தொடர்ந்து ட்விட்டரில் பாராட்டி பதிவிட்டு வந்தனர்.
மேலும் ஆஸ்க்காருக்கு இந்த படத்தை சொந்த முயற்சியில் ராஜமௌலி அனுப்பி இருக்கிறார். அதில் அவர் வெல்வதற்கும் அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

கோல்டன் க்ளோப்
இந்நிலையில் தற்போது கோல்டன் க்ளோப் விருதுகளில் இரண்டு பிரிவுகளில் ஆர்ஆர்ஆர் படம் நாமினேட் ஆகி இருக்கிறது. சிறந்த non-English படம் மற்றும் நாட்டுக்கூத்து பாடல் சிறந்த original பாடல் பிரிவில் நாமினேட் ஆகி இருக்கிறது.
இந்த தகவலை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.

தயாரிப்பாளராகும் லோகேஷ் கனகராஜ்.. 2 டாப் ஹீரோக்கள் உடன் கூட்டணி