அடுத்த கட்டத்திற்கு சென்ற ஆர்.ஆர்.ஆர் படம்.. கூடும் எதிர்பார்ப்பு
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாக்கி உள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஆர்.ஆர்.ஆர் படக்குழு ரிலீஸ் தேதியை மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
