உலகம் முழுவதும் முதல் நாளில் RRR திரைப்படம் செய்த வசூல்- தெறிக்கும் கலெக்ஷன்
RRR திரைப்படம் எஸ்.எஸ். ராஜமௌலியின் பல வருட உழைப்பில் தயாராகியுள்ள ஒரு திரைப்படம். இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஒன்றாக இணைந்து முதன்முதலாக நடித்துள்ள திரைப்படம்.
ஆரம்பம் முதல் ரிலீஸ் வரை
2018ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பட அறிவிப்பு வந்தது, 2019ம் ஆண்டு ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. மேலும் படப்பிடிப்பு இந்தியா சுற்றியும், உக்ரைன் மற்றும் பல்கேரியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
ரூ. 550 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் 2020ம் ஆண்டு ஜுலை 30ம் தேதியே வெளியாக வேண்டியது. பின் கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் 2021ம் ஆண்டு ஜனவரி மாதமே வெளியாக வேண்டியது, அப்போதும் கொரோனா பிரச்சனை.
ஒருவழியாக மார்ச் 25 அதாவது நேற்று படம் உலகம் முழுவதும் வெளியாகிவிட்டது. படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்று கொண்டாடி வருகிறார்கள்.
படத்தின் கலெக்ஷன்
தமிழகத்தில் முதல் நாளில் படம் ரூ. 12 கோடி வரையும் ஆந்திராவில் ரூ. 100 கோடி வரை வசூலித்திருக்கிறதாம்.
உலகம் முழுவதும் படம் முதல் நாளில் ரூ. 200 கோடி வரை வசூல் செய்து சாதனை செய்திருப்பாக தகவல்கள் வந்துள்ளன.
சீரியல் நடிகர் நவீனுடனான காதல் குறித்து முதன்முறையாக மேடையில் பேசிய கண்மணி- என்ன சொன்னார் தெரியுமா?

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri
