தெறிக்கும் RRR படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ் வசூல்- இதுவரை எவ்வளவு தெரியுமா?
RRR இந்திய சினிமாவில் படு பிரம்மாண்டமாக தயாராகி கடந்த மார்ச் 24ம் தேதி படம் வெளியாகி இருந்தது. உலகம் முழுவதும் அந்தந்த மொழிகளில் படம் டப் செய்யப்பட்டு வெளியானது.
சில மொழிகளில் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் இருவரும் சொந்த குரலிலேயே டப் செய்திருந்தனர்.
படத்தின் புரொமோஷன்கள்
இப்படத்தின் ரிலீஸில் வலிமை படம் போல் கொரோனாவால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. கடைசியாக தான் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. ராஜமௌலி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை இந்த படத்திலும் தெரிகிறது, வசூல் மழை பொழிந்த வண்ணம் உள்ளது படம்.

இதுவரையிலான வசூல்
RRR திரைப்படம் ரூ. 1000 கோடி வசூலை நோக்கி பயணித்து வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ. 920 கோடி வரை வசூலித்துள்ளதாம், தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூ. 65 கோடி வரை வசூலித்துள்ளது.

அஜித் ரசிகர் மன்றத்தை கலைக்க இதுதான் உண்மையான காரணம்.. முதல் முறையாக வெளிவந்த ஷாக்கிங் செய்தி