ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக்
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாக்கி உள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
இப்படம் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அடுத்தமாதம் வெளியாகும் என காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில், 'ஆர்.ஆர்.ஆர் ' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதோ அந்த அறிவிப்பு பதிவு..
Post production nearly done to have #RRRMovie ready by October’21.
— RRR Movie (@RRRMovie) September 11, 2021
But as known to many, we are postponing the release but cannot announce a new date with theatres indefinitely closed.
We will release at the earliest possible date when the world cinema markets are up and running.