ஆர்.ஆர்.ஆர் டிரைலர் எப்படி இருக்கிறது.. ஓகேவா..? இல்லையா..?
ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தை தொடர்ந்து மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.
இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவகன், சமுத்திரிக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு பிரமாண்டமான முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டிரைலர் இன்று காலை வெளியானது.
இதனை பார்க்கும் பொழுது, இந்தியா சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அடிமைப்பட்டிருக்கும் நேரத்தை, டிரைலர் கண்முன் நிறுத்துகிறது.
இதில், பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்க்கும் ஒருவாக ஜூனியர் என்.டி.ஆரும், பிரிட்டிஷ் அரசாங்கத்தில் காவலாளியாக பணிபுரிந்தும், இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடும் நபராக ராம் சரணும் நடித்துள்ளது தெரிகிறது.
சிறு வயதில் இருந்து நண்பர்களாக இருக்கும் இருவரும், எதிர் எதிர் இடங்களில் இருந்தாலும், இந்தியா என்றால் ஒன்றிணைத்து போராடும் போராளிகளாக இருவரும் காணப்படுகிறார்கள்.
டிரைலரில் காமிக்கப்பட்ட பிரமாண்ட செட்களும், VFX காட்சிகளும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மொத்தத்தில் பிரமாண்டத்தை கண்முன் நிறுத்தும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் திரையரங்கில் எப்படி இருக்கிறப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.