பெரிய பட்ஜெட்டில் தயாரான RRR படத்தின் இதுவரையிலான முழு வசூல்- செம கலெக்ஷன்
RRR திரைப்படம் இந்திய சினிமா கொண்டாடி வரும் ஒரு படம். 1920ம் ஆண்டில் நடக்கும் ஒரு விஷயம் படத்தில் பேசப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்படம் 2022ல் தான் வெளியாகியுள்ளது.
படத்திற்கான புரொமோஷன்கள்
பொதுவாக ஒரு பேட்டி கொடுத்தாலே பிரபலங்கள் துவண்டு விடுவார்கள், ஆனால் இந்த RRR படத்திற்காக எஸ்.எஸ்.ராஜமௌலி, ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் என 3 பேரும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பேட்டிகள் தொடர்ந்து கொடுத்து வந்தார்கள்.
நிறைய பேட்டிகள் கொடுக்க ஜுனியர் என்.டி.ஆர் ஒரு நிகழ்ச்சியில் கூட தடுமாறிவிட்டார்.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
ரூ. 550 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் நாள் முடிவிலேயே உலகம் முழுவதும் ரூ. 240 கோடி வரை வசூலித்திருந்தது. இப்போது படம் வெளியாகி 9 நாட்கள் ஆகிவிட்டது, வசூலும் பெரிய அளவில் உள்ளது.
இதுவரை படம் ரூ. 850 கோடி வரை வசூலித்துள்ளதாக செம சூப்பரான தகவல் வந்துள்ளது.
பீஸ்ட் ட்ரைலரில் முகமூடி அணிந்து வந்த வில்லன் யார் தெரியுமா.. இதோ நீங்களே பாருங்க