ஆர்ஆர்ஆர், வலிமை ரிலீஸ் தேதி.. சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்! முக்கிய படங்கள் ரிலீஸ் அப்டேட் இதோ!
தற்போது கொரோனா ஊரடங்கு காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதனால் தியேட்டர்கள் மீதான கட்டுப்பாடுகளும் விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆக வரிசைகட்டி நிற்கின்றன.
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாமல் தள்ளிபபோன படங்கள் வரும் மாதங்களில் ரிலீஸ் ஆக உள்ளன. அஜித்தின் வலிமை படம் பிப்ரவரி 24ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
மேலும் ராஜமௌலியின் ஆர்ஆர் ஆர் படம் மார்ச் 25ம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர். இதே தேதியில் தான் சிவகார்த்திகேயனின் டான் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஆர்ஆர்ஆர் வருவதால் டான் படம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.
எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
#RRRonMarch25th, 2022.....
— DVV Entertainment (@DVVMovies) January 31, 2022
FINALISED! ??@ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @RRRMovie @DVVMovies #RRRMovie pic.twitter.com/622qfdRUUX