பிரம்மாண்டத்தின் உச்சம், ரிலீஸ் முன்பே பல கோடி USAவில் வசூலித்த RRR திரைப்படம்- இத்தனை கோடியா?
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் எப்படியோ அப்படி தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு இயக்குனர் என்றால் அது ராஜமௌலி தான்.
பாகுபலி என்ற பெரிய படத்தை கொடுத்த அவர் பெரிய அளவில் ரசிகர்களால் கவனிக்கப்படுகிறார். அந்த படத்தை தொடர்ந்து சின்ன படம் இயக்குவார் என்று பார்த்தால் RRR என்ற பெரிய படத்தை இயக்கியுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடிக்க பெரிய அளவில் வெளியாக இருக்கிறது படம்.
படத்தின் டிரைலர், பாடல்கள் எல்லாம் மக்களிடம் செம ரீச், தற்போது படத்தின் வெளிநாட்டு புக்கிங் குறித்து ஒரு அசத்தல் தகவல் வந்துள்ளது.
USAவில் 1802 ஷோக்கள் 2,37,994 டிக்கெட்டுகளுடன் புக் ஆகியுள்ளதாம்.
இதுவரை டிக்கெட் புக்கிங்கில் மட்டுமே படம் ரூ. 8 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.