லாரன்ஸ் படத்தில் ஆடியதற்கு சம்பளம் தரல.. டான்சர்கள் போலீஸ் நிலையத்தில் புகார்
ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ருத்ரன். அந்த படத்திற்கு கலவையான விமர்சனம் தான் கிடைத்தது.
ருத்ரன் படத்தில் வரும் பாடல் ஒன்றிற்காக பின்னணியில் ஆடும் நடன கலைஞர்களை ஏற்பாடு செய்து கொடுத்த ராஜ் என்பவர் சென்னை போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார்.

சம்பளம் தரல
தான் 20க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களை அந்த பாடலுக்காக அழைத்து சென்றதாகவும், தொடர்ந்து 10 நாட்கள் ஷூட்டிங்கில் பங்கேற்ற நிலையில் அதற்கான சம்பளத்தை தற்போது வரை தரவில்லை என புகார் கொடுத்திருக்கிறார் அவர்.
அது பற்றி மேனேஜர் ஸ்ரீதர் என்பவரிடம் கேட்டதற்கு பணம் தர முடியாது, எங்கு வேண்டுமானாலும் போய் புகார் செய்துகொள் என கூறி மிரட்டுகிறாராம். ஸ்ரீதர் தற்போது விஜய்யின் லியோ படத்தில் மேனேஜர் ஆக இருந்து வருகிறாராம்.
தொடர்ந்து பணம் கேட்டால் அடுத்து லியோ படத்திற்கு உங்களுக்கு சான்ஸ் கிடைக்க விட மாட்டேன் எனவும் கூறுகிறாராம்.
தற்போது போலீசார் இது பற்றி விசாரித்து பணத்தை பெற்று தருவதாக கூறி இருக்கிறார்களாம்.
3
6ம் வகுப்பு படிக்கும்போதே பிரபல கிரிக்கெட் வீரருடன் காதல்! உண்மையை போட்டுடைத்த ஐஸ்வர்யா லட்சுமி
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan