39 வயது நடிகருடன் இணைந்த தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகை ருக்மிணி வசந்த்.. கைவசம் இத்தனை படங்களா
ருக்மிணி வசந்த்
கன்னட திரையுலகம் மூலம் பிரபலமாகி இன்று ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்துள்ளார் ருக்மிணி வசந்த். இவர் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த Ace படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி ஜூனியர் என்.டி.ஆர் உடன் ஒரு படம் மற்றும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
டாக்சிக்
சென்சேஷனல் நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை ருக்மிணி வசந்த், கேஜிஎப் யாஷ் உடன் இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டாக்சிக். இப்படத்தில் யாஷ் உடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, Kyle Paul, ஹுமா குரேஷி என பலரும் நடித்து வருகிறார்கள்.
இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ருக்மிணி வசந்த் கமிட்டாகி நடித்து வருவதாக லேட்டஸ்ட் தகவல் கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.