ருக்மிணி வசந்த் புகாரில் 3 பேரை கைது செய்த போலீஸ்! செல்போன்கள் பறிமுதல்

By Parthiban A Jun 20, 2026 11:52 AM GMT
Report

தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் முக்கிய நடிகையாக இருப்பவர் ருக்மிணி வசந்த். அவர் தமிழில் விஜய் சேதுபதியின் 'ஏஸ்', சிவகார்த்திகேயனின் 'மதராஸி' போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் அவர் நடித்த 'காந்தாரா சேப்டர் 1' படம் மிகப்பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. அடுத்து அவர் யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்', ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 'டிராகன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சில வாரங்களுக்கு முன்பு ருக்மிணி வசந்த் பிகினி உடையில் இருப்பது போன்ற ஒரு வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அது போலி வீடியோ எனவும், அதை உருவாக்கி இணையத்தில் கசியவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்திருந்தார்.

ருக்மிணி வசந்த் புகாரில் 3 பேரை கைது செய்த போலீஸ்! செல்போன்கள் பறிமுதல் | Rukmini Vasanth Ai Photos Issue Police Arrest 3

3 பேர் கைது

அதுபற்றி தற்போது பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்து மூன்று பேரை கைது செய்திருக்கின்றனர். அவர்களின் புகைப்படமும் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

அவர்களிடம் இருந்து மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

 சைபர் க்ரைம் போலீசார் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கைக்கு தற்போது ரசிகர்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US