நயன்தாரா, கியாரா அத்வானியை தொடர்ந்து யாஷ் உடன் கைகோர்த்த 5-வது நடிகை.. யார் தெரியுமா?
டாக்சிக்
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் டாக்சிக். இப்படத்தில் கன்னட நடிகர் யாஷ் ஹீரோவாக நடிக்கிறார்.

கே.ஜி.எப் 2 வெற்றிக்கு பின் யாஷ் நடிக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், டாக்சிக் திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகளின் போஸ்டர்களை தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வருகிறார்கள்.

5-வது நடிகை
ஹுமா குரேஷி, கியாரா அத்வானி, நயன்தாரா, தாரா சுதாரியா ஆகியோரின் போஸ்டர் இதுவரை வெளிவந்த நிலையில், தற்போது நடிகை ருக்மிணி வசந்த் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
டாக்சிக் திரைப்படத்தில் நடிகை ருக்மிணி வசந்த், மெல்லிசா (Mellisa) என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதோ அந்த போஸ்டர்:
