இளம் நடிகருக்கு ஜோடியாகும் ருக்மிணி வசந்த்.. படத்தின் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர்..
ருக்மிணி வசந்த்
சூப்பர் அப்டேட் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் நடிகை ருக்மிணி வசந்த். கன்னட திரையுலகம் மூலம் அறிமுகமாகி இன்று ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ளார்.

இவர் தமிழில் வெளிவந்த ஏஸ் மற்றும் மதராஸி ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். ஆனால், கடந்த ஆண்டு இவர் நடித்த காந்தாரா படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
அடுத்த படம்
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு ருக்மிணிக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ருக்மிணி வசந்த் அடுத்ததாக துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கப்போவதாக லேட்டஸ்ட் தகவல்கள் கூறுகின்றன.

இப்படத்தை தெலுங்கு இயக்குநர் தீபக் ரெட்டி இயக்க சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்கிறாராம். ரொமான்டிக் காமெடி Entertainer படமாக இது இருக்குமாம். விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிடம் மண்டியிட்ட பாகிஸ்தான்: விரக்தியில் டிவியை போட்டுடைத்த ரசிகர்: வைரல் வீடியோ News Lankasri