தெலுங்கு முன்னணி ஹீரோவுடன் இணையும் ருக்மிணி வசந்த்.. இந்த டாப் நடிகர் தான் தயாரிப்பாளர்
ருக்மிணி வசந்த்
தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நாயகியாக வலம் வருபவர் ருக்மிணி வசந்த். கன்னடத்தில் சப்த சாகரதாச்சே எல்லோ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இதை தொடர்ந்து வெளிவந்த காந்தாரா திரைப்படம் இவருக்கு பான்-இந்தியா அளவில் பிரபலத்தை பெற்று தந்தது. தற்போது டிராகன், டாக்சிக் போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் டாக்சிக் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய படத்தில் ருக்மிணி
இந்த நிலையில், ருக்மிணி வசந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது என தகவல் தெரிவிக்கப்படுகிறது. தெலுங்கில் டாப் நடிகராக வலம் வரும் நானி தயாரிப்பில், ருக்மிணி வசந்த் கதாநாயகியாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் நிதின் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் முரளிகாந்த் தேவசோத் இயக்கப்போவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
