அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் டாக்ஸிக் படத்தின் அப்டேட் தந்த நடிகை ருக்மிணி வசந்த்..
ருக்மிணி வசந்த்
தமிழில் Ace மற்றும் மதராஸி ஆகிய படங்களில் நடித்த ருக்மிணி வசந்த், காந்தாரா சாப்டர் 1 படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இப்படம் உலகளவில் ரூ. 855 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ருக்மிணி வசந்த் நடிப்பில் டாக்ஸிக் என்கிற படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
டாக்ஸிக் அப்டேட்
இந்த நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடி வந்த ருக்மிணி வசந்த், டாக்ஸிக் படம் குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது "நாம் இதுவரை கன்னடம் அல்லது இந்திய சினிமாவில் பார்த்த எதையும் போல் இல்லாமல் டாக்ஸிக் வித்தியாசமாக இருக்கும்" என கூறியுள்ளார்.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது. நயன்தாரா, ஹுமா குரேஷி மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.