நடிகை ருக்மிணி வசந்தின் காதலர் இவர்தானா.. வெளிவந்த புகைப்படம் இதோ
ருக்மிணி வசந்த்
கன்னடத்தில் வெளிவந்த சப்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ருக்மிணி வசந்த். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் மாபெரும் வரவேற்பை பெற்றதை நாம் அறிவோம்.

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஏஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மதராஸி படத்தில் நடித்தார். அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ருக்மிணி வசந்த் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

திரையுலக நட்சத்திரங்களின் சொந்த வாழ்க்கை குறித்து அவ்வப்போது சில தகவல்கள் இணையத்தில் வைரலாகும். அது உண்மையா இல்லை வெறும் வதந்தியா என்பதைப்பற்றி பின் தெரியவரும்.
ருக்மிணியின் காதலர்?
இந்த நிலையில், நடிகை ருக்மிணி வசந்த் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த நபர்தான் ருக்மிணியின் காதலர் என பலரும் இணையத்தில் கூறி வருகிறார்கள். ஆனால், அவர் ருக்மிணியின் காதலர் அல்ல, நண்பர் என தற்போது தெரியவந்துள்ளது.

இதை பற்றி ருக்மிணி வசந்த் பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவும் கூறியிருப்பார். ஆனாலும், அந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள், அவர் ருக்மிணி காதலர் அல்ல, நண்பர் மட்டும்தான்.