திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டமில்லாமல் தரிசனம்.. நடிகை ரூபிணியிடம் ரூ.1.5 லட்சம் பண மோசடி
80களில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரூபிணி. இவர் ரஜினியின் மனிதன், ராஜா சின்ன ரோஜா, விஜயகாந்தின் புலன் விசாரணை, கமலின் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
தொன்னூறுகளின் இடையில் அவர் நடிப்பதை நிறுத்திவிட்டார். மோகன் என்பவரை திருமணம் செய்துகொண்டு அவர் செட்டில் ஆகிவிட்டார்.
மோசடி
நடிகை ரூபிணி தற்போது கணவர், மகன், மகள் என குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். ரூபிணி தீவிரமான ஏழுமலையான் பக்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரூபிணிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த சரவணன் என்பவர் அறிமுகம் ஆகி தான் பல பிரபலங்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி இருக்கிறார்.
பல பிரபலங்கள் உடன் இருக்கும் போட்டோவையும் அவர் காட்டி இருக்கிறார். அதை நம்பி தனக்கும் திருப்பதியில் கூட்டம் இல்லாமல் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யும் படி கேட்டிருக்கிறார்.
அதற்கு அவர் 77 ஆயிரம் ருபாய் தரும்படி கேட்டிருக்கிறார். அவரும் பணம் கொடுக்க அதன் பின் விடுதி கட்டணம் போன்ற பல காரணங்களை கூறி மொத்தம் ஒன்றரை லட்சம் ரூபாயை வாங்கிவிட்டாராம்.
ஆனால் இவ்வளவு பணம் வாங்கிவிட்டு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யவில்லையாம். ஒருகட்டத்தில் சரவணனை தொடர்பு கொள்ள முடியாமல் போக அவர் மோசடி செய்பவர் என்பது தெரியவந்திருக்கிறது. இது பற்றி நடவடிக்கை எடுக்க ஆந்திரா மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நடிகை கோரிக்கை வைத்து இருக்கிறார்.

ரூ 24,000 கோடி மதிப்பிலான மாளிகையில் வசிக்கும் பெண்மணி: அவரது குடும்ப சொத்துக்களின் மதிப்பு News Lankasri

Serial update: குணசேகரனுக்கு எதிராக சதிச் செய்யும் கதிர்- வசமாக சிக்கிய மகன்.. அதிகாரியின் அதிரடி Manithan
