குஷி படத்தில் ஜோதிகாவுக்கு அந்த பெயர் வைக்க காரணம் இதுதான்.. எஸ்.ஜே. சூர்யா உடைத்த சீக்ரெட்
எஸ்.ஜே. சூர்யா
தமிழ் சினிமாவில் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் வில்லனாக கலக்கிக்கொண்டு இருப்பவர் எஸ்.ஜே. சூர்யா.
ரசிகர்கள் இவரை நடிப்பு அரக்கன் என அழைத்து கொண்டாடி வருகிறார்கள். அஜித்தின் வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின் விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கினார்.
தொடர்ந்து இயக்குனராக படங்களை இயக்கி வந்த எஸ்.ஜே. சூர்யா ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்கலாம் என முடிவு செய்தார். இறைவி படத்தின் மூலம் சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
காரணம் இதுதான்
தொடர்ந்து ஹீரோவாகவும், வில்லனாகவும் கலக்கிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், குஷி படத்தில் ஜோதிகாவுக்கு ஜெனிஃபர் என்பது தான் பெயர் ஆனால் படத்தில் விஜயகுமார் செல்வி என்று தான் அழைப்பார். அதன் காரணம் குறித்து எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்துள்ளார்.
அதில், " என் அப்பா என் அக்காவை செல்வி என்று தான் கூப்பிடுவார். அதை கண்டு தான் விஜயகுமாரை ஏலே செல்வி என்று ஜோதிகாவை அழைக்க வைத்தேன்" என்று கூறியுள்ளார்.