அஜித்துக்கு ஒருவரை பிடித்துவிட்டால் அவர் கொடுக்கும் காஸ்ட்லி கிஃப்ட்.. எஸ்.ஜே.சூர்யா உடைத்த விஷயம்
எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 1999ம் ஆண்டு அஜித் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் வாலி. அஜித்தின் ஆரம்ப கட்ட சினிமா பயணம் அது, அப்போதே அவர் இரட்டை வேடத்தில் நடித்தது மிகவும் நெகட்டீவாக பேசப்பட்டது. ஆனால் படம் வெளியாகி மாஸான வரவேற்பை பெற்றது.
காஸ்ட்லி கிஃப்ட்
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் பற்றி இப்படத்தின் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா பழைய பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " அஜித், தனக்கு யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களுக்கு அவர் காஸ்ட்லி கிஃப்ட் பரிசளிப்பார். அந்த வகையில், அஜித்திடம் வாலி பட கதை சொன்னபோது அது அவருக்கு பிடித்துப்போனதால் எனக்கு பைக்கை பரிசாக அளித்தார்.
அதேபோல் வாலி படத்தின் பர்ஸ்ட் காபி பார்த்துவிட்டு கார் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அவருக்கு ஒன்று பிடித்துவிட்டால் அது எவ்வளவு விலையாக இருந்தாலும் அதை வாங்கி கொடுத்து விடுவார்" என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் திமுகதான்.. மேலே வந்த விஜயின் தவெக - அப்போ அதிமுகவின் நிலை? (தேர்தல் கருத்து கணிப்பு) IBC Tamilnadu

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri
