இசை உலகிற்கு பேரிழப்பு.. பாடகி எஸ்.ஜானகி மறைவு பற்றி CM விஜய் உருக்கம்

By Parthiban A Jul 11, 2026 11:28 PM GMT
Report

பின்னணி பாடகி எஸ்.ஜானகி அவர்கள் வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, மைசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில், ஜூலை 11ம் தேதி இரவு 7.30 மணிக்கு உயிரிழந்தார்.

அவரது மரணம் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறது. அவருக்கு பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இசை உலகிற்கு பேரிழப்பு.. பாடகி எஸ்.ஜானகி மறைவு பற்றி CM விஜய் உருக்கம் | S Janaki Death Cm Vijay Condolence Tweet

முதல்வர் விஜய் இரங்கல்

நடிகரும் முதலமைச்சருமான விஜய் வெளியிட்டு இருக்கும் இரங்கல் செய்தியில், எஸ்.ஜானகி மறைவு இசை துறைக்கு பேரிழப்பு என கூறி இருக்கிறார்.

இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.

அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US