ஓடாது.. நயன்தாரா படத்திற்கு சாபம் கொடுத்த நடிகர் எஸ்.வி.சேகர்! என்ன பிரச்சனை?
நயன்தாரா, மாதவன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் டெஸ்ட் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் பிரபல நடிகர் எஸ்வி சேகர் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன் பிறகு நீக்கப்பட்டுவிட்டாராம். தற்போது டெஸ்ட் படத்தின் ரிலீசுக்கு பிறகு அவர் ட்விட்டரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
ஓடாது..
"என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ, விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. வரலாறு தொடர்கிறது" என அவர் பதிவிட்டு இருக்கிறார்.
அவரது X தள பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ, விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. வரலாறு தொடர்கிரது. pic.twitter.com/qIWnmi3SJK
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) April 6, 2025