விஜயகாந்த் மறைவு.. மனம் உடைந்துபோன விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்.. வெளியிட்ட வீடியோ
கேப்டன் விஜயகாந்த் மறைவு
திரையுலகில் மிகவும் நெருக்கமான உறவில் இருந்தவர்கள் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் கேப்டன் விஜயகாந்த்.
இன்று காலை விஜயகாந்த் மறைந்த செய்தி எஸ்.ஏ. சந்திரசேகரை தாமதமாக சென்றடைந்துள்ளது. துபாய்க்கு சென்றுள்ள எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னால் வர இயலவில்லை என்றும், விஜயகாந்தின் மறைவு தன்னை மனம் உடைய செய்துவிட்டது என்றும் கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், விஜயகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, தன்னுடைய இரங்கலை ஆடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
மனம் உடைந்துபோன எஸ்.ஏ. சந்திரசேகர்
இதில் 'என் இனிய நண்பர் விஜயகாந்த் அவர்களை உயிருடன் இருக்கும் போதே, நேரில் பார்த்து ஆரத்தழுவி கட்டி அணைத்துக்கொள்ள வேண்டும் என இணைந்தேன். அதற்காக இரண்டு ஆண்டுகள் நான் முயற்சியும் செய்தேன். ஆனால், அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் உயிரற்ற உடலை கூட நான் பார்க்க கூடாது என்று இறைவன் நினைத்துவிட்டானோ என்னவோ தெரியவில்லை'.
'நான் தற்போது துபாயில் இருக்கிறேன். திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி இன்று ஒரு சகாப்தம் முடிவடைந்து இருக்கிறது. அதற்காக கண்ணீர் சிந்துவதை விட வேறொன்றும் மொழி எனக்கு தெரியவில்லை. அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்' என மனம் உருகி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/Dir_SAC/status/1740296908999192690

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
