ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி சரிகமப லில் சாம்ப்ஸ் புகழ் திவினேஷிற்கு ஏற்பட்ட சோகம்... என்ன ஆனது தெரியுமா?
சரிகமப லில் சாம்ப்ஸ்
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் சரிகமப.
ஜீ தமிழில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகும் இந்த ஷோ தமிழக மக்களிடம் மிகவும் பிரபலம். கடைசியாக சரிகமப சீசன் 5 கடந்த வருடம் முடிவடைந்த நிலையில் சிறுவர்களுக்கான சீசன் தொடங்கப்பட்டது.
சரிகமப லில் சாம்ப்ஸ் சீசன் 5 இப்போது சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியாளரும் அட்டகாசமாக பாடி மக்கள் மனதை கவர்ந்து வருகிறார்கள்.

திவினேஷ்
சரிகமப லில் சாம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானவர் தான் திவினேஷ். இப்போது உள்ள பாடல்களை பாடி மக்களை கவர்ந்தவர் இவர் இல்லை, மிகவும் பழைய பாடல்களை உணர்ச்சி பொங்க பாடி எல்லோரையும் அசத்தியவர்.
பைனல் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடி அவர் கையால் விருதை வாங்கியிருந்தார். அண்மையில் திவினேஷ் தனது பெற்றோருடன் ஒரு இடத்திற்கு சென்றுள்ளார்.
அவர் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்க திவினேஷ் மிகவும் பயந்துள்ளார், இன்னும் கொஞ்ச நேரம் அந்த இடத்தில் அவர் இருந்திருந்தால் கண்டிப்பாக அழுதிருப்பார் போல் தெரிகிறது.
