நேரடியாக ஓடிடி-யில் வெளிவரும் கீர்த்தி சுரேஷின் திரைப்படம்.. காரணம் வன்முறை தானாம்
ராக்கி படத்தை இயக்கி தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருப்பவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.
இவருடைய அடுத்த இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சாணி காயிதம். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடித்துள்ளனர்.
ராக்கி படத்தில் வன்முறை காட்சிகள் கொஞ்சம் அதிகமாகேவே இருந்தது. ஆனால், சாணி காயிதம் படம் வன்முறையில் ராக்கிய விஞ்சியதாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் சாணி காயிதம் திரைப்படம் நேரடியாக ஓடிடி யில் வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்டது.
இந்நிலையில், அமேசான் பிரைமில் ஏப்ரல் மாதம் சாணி காயிதம் திரைப்படம் நேரடியாக வெளியாகும் என்று லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கின்றனர்.