சபாபதி திரைவிமர்சனம்

pugazh santhanam ms basker sabapathy movie review
8 மாதங்கள் முன்

சந்தானத்தின் நடிப்பில் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் சபாபதி. எப்போதும் போல் இல்லாமல், இப்படத்திற்காக புதிய முயற்சி செய்து திக் வாய்யாக நடித்துள்ளார் சந்தானம். இந்த கதாபாத்திரமே இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக சபாபதி பூர்த்தி செய்யதாரா..? இல்லையா..? வாங்க பார்க்கலாம்..

கதைக்களம்

விதியின் விளையாட்டில் திக்கு வாயூடன் பிறப்பில் இருந்தே பல கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்திக்கிறார் சபாபதி {சந்தானம்}. அவருக்கு ஆதரவாக சிறு வயதில் இருந்தே துணை நிற்கிறார் சாவித்திரி { ப்ரீத்தி வர்மா} அறிமுகம்.

அரசாங்க வேலையில் இருந்து ஊய்வு பெறும் சபாபதியின் தந்தை, உடனடியாக சபாபதி வேலைக்கு செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பல interview-களுக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால், அங்கும் சபாபதிக்கு அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது.

இதனால், மனமுடைந்து போகும் சபாபதி, ஒரு கட்டத்தில் மது அருந்திவிட்டு வீட்டில் செம ரகளை செய்கிறர். போதையில் இருக்கும் சபாபதிக்கு தெரியாமல், ஒரு மிகப்பெரிய விஷயம் நடக்கிறது. இதன்மூலம், விதியின் கையில் சிக்கிக்கொள்கிறார் சபாபதி. விதியின் வினையான விளையாட்டை சபாபதி எப்படி  எதிர்கொண்டார் என்பதே இப்படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

எப்போதும் போல் நகைச்சுவை நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தாமல், உணர்பூர்வமான நடிப்பையின் சந்தானம், இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு நிகரான கதாபாத்திரத்தில் எம்.எஸ். பாஸ்கர் கலக்கியுள்ளார்.

கதாநாயகியாக வரும் நடிகை பிரீத்தி வர்மா, அறிமுக படத்தில் தனக்கு கொடுத்ததை மட்டுமே செய்துள்ளார். ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட சந்தனாம், புகழ் காம்போ ஒர்கவுட் ஆகவில்லை. ஏனென்றால், புகழ் வந்ததே ஓரிரு காட்சி தான். அதனால், அறிமுக படத்தில் புகழுக்கு ஸ்கோப் இல்லாமல் போய்விட்டது.

வில்லனாக வரும் Sayaji Shinde நடிப்பு ஓகே. இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் எடுத்துக்கொண்ட கதைக்களம் சூப்பர். அதற்கு ஏற்றாற்போல் திரைக்கதையை கச்சிதமாக அமைத்துள்ளார். வெறும் நகைச்சுவை மட்டுமில்லாமல், துவண்டுயிருக்கும் பலருக்கும் இப்படம் நம்பிக்கையான மெசேஜ் சொல்கிறது.

ஆனால், படத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூறியிருக்கலாம். சில காட்சிகள் பார்ப்பவர்களை போர் அடிக்க செய்கிறது. சாம் சி.எஸ் பாடல்கள் பெரிதளவில் ஒர்கவுட் ஆகலவில்லை என்றாலும், பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.

க்ளாப்ஸ்

சந்தானம், எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பு

ஸ்ரீனிவாச ராவ்வின் கதை, இயக்கம்

டைமிங் நகைச்சுவை  

கிளைமாக்ஸ்  

பல்ப்ஸ்

சில இடங்களில் விறுவிறுப்பு கூடியிருக்கலாம்

எதிர்பார்ப்பில் இருந்த புகழின் நடிப்பு

மொத்தத்தில் சபாபதியின் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை..  

2.75 / 5


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US