சப்தம் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
சப்தம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆதி. இவர் அய்யனார், மிருகம், ஈரம், மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்து தமிழக ரசிகர்களில் மனதில் இடம்பிடித்தார்.
இவருடைய நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் சப்தம். இப்படம் கடந்த பிப்ரவரி 28ம் தேதி தெலுங்கில் வெளிவந்துவிட்டது. ஆனால், சில காரணங்களால் அன்று தமிழில் வெளிவரவில்லை. இதன்பின் நேற்று தான் தமிழில் திரைக்கு வந்தது.
இப்படத்தை இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ளார். ஈரம் படத்திற்கு பின் ஆதி - அறிவழகன் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். திகில் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், சப்தம் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் ரூ. 1.2 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

எனக்கு முன்னாடி 4 பேர்; இந்த வேலைக்கு பேர் என்ன? - நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் பதிலடி IBC Tamilnadu

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
