விஜயகாந்த்தை கடைசியாக பார்த்து விஜய் அழுத காரணமே இதான்- எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு
விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் விஜயகாந்த். நல்ல நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி சிறந்த மனிதராக பலருக்கும் தன்னால் முயன்ற உதவிகளை செய்துள்ளார்.
அவர் எந்த அளவிற்கு சிறந்த மனிதராக இருந்தார் என்பது அவரின் இறுதி ஊர்வலத்தில் அனைவருக்குமே தெரிந்திருக்கும்.
நடிகர் சங்கம் கடனில் மூழ்கிய போது ஒரே ஆளாக பொறுப்பு ஏற்று கடனில் இருந்து மீட்டவர், புதிய நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் அவர்களின் பெயர் வைக்க வேண்டும் என கலைஞர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
விஜய்-விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் தான் டாப்பில் இருந்த காலத்தில் புதியதாக வந்த விஜய், சூர்யா போன்றவர்களின் படங்களில் அவர்களுக்காக ஒரு படம் நடித்து கொடுத்துள்ளார், இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்.
கடைசியாக விஜயகாந்த் அவர்களை கண்டு விஜய் கலங்கியது எல்லாம் பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது.
அண்மையில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில், விஜயகாந்த் உடலை பார்த்து விஜய் கண் கலங்கியதற்கு காரணம் நன்றி விசுவாசம்தான்.
நாம் இந்த இடத்துக்கு வருவதற்கு முக்கிய காரணங்களில் அவரும் ஒருவராக இருந்திருக்கிறாரே என நினைத்தால் போதும். அதுதான் கண்களில் கண்ணீராக வந்து அஞ்சலி செலுத்த வைக்கும் என பேசியுள்ளார்.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
