காசு வாங்கிட்டேன்.. என்ன பண்றது! - விஜய் பற்றி எஸ்ஏசி சொன்ன விஷயம்
நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது சம்பளம் படத்திற்கு படம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அவர் உச்சத்தில் இருக்கும் நேரத்திலேயே அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து, சினிமாவில் இருந்து விளங்குவதாகவும் தெரிவித்து இருக்கிறார். தற்போது அவர் நடித்து வரும் GOAT படத்தை முடித்துவிட்டு இன்னும் ஒரே ஒரு படம் தான் நடிக்க இருக்கிறார்.
என்ன பண்றது..
விஜய் இந்த அளவு உயரத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தது அவரது அப்பா எஸ்ஏசி தான். ஆரம்பகாலத்தில் விஜய் கெரியரில் அவர் பல உதவிகளை செய்து இருக்கிறார்.
விஜய் ஒரு படத்தை ஒப்புக்கொண்டால் அதை சொன்ன தேதியில் நடித்து கொடுத்துவிடுவார். அப்படி அவர் ஓயாமல் நடித்து கொண்டிருப்பதை பார்த்த எஸ்ஏசி, 'கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமே' என கூறினாராம். அதற்கு விஜய் "காசு வாங்கிட்டேன்.. என்ன பண்றது" என பதில் கூறினாராம்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
