தனியாக பிறந்தநாளை கொண்டாடிய விஜய்யின் அப்பா எஸ்ஏசி! விஜய் எங்கே என கேட்கும் ரசிகர்கள்
தற்போது விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி அந்த படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் கதையே அப்பா - மகன் சென்டிமென்டை மையப்படுத்தி தான் இருக்கும் என கூறப்படுகிறது.
விஜய் அந்த படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது விஜய்யின் அப்பா எஸ்ஏசி தனது பிறந்தநாளை தனியாக வீட்டில் மனைவி உடன் மட்டும் கொண்டாடி இருக்கும் ஸ்டில் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
அதை பார்த்த நெட்டிசன்கள் விஜய் எங்கே என கேள்வி எழுப்பி வருகின்றனர், மேலும் முதுமையில் தனிமை கொடுமை எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
வெளிவரப்போகும் 'வாரிசு' படத்தின் நாயகன் விஜயின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இன்று பிறந்தநாள். மனைவி ஷோபாவுடன் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்கிறார். படத்தில் விஜய் இல்லையே என்று கேட்கவேண்டாம். படமெடுத்தவரே விஜயாக இருக்கக்கூடும். pic.twitter.com/BBzHjovwoU
— R Muthu Kumar (@rmuthukumar) July 2, 2022
முதுமையில் தனிமை கொடுமை! pic.twitter.com/RZszZPcluK
— Parthiban (@parthispeaks) July 2, 2022

அமெரிக்காவிற்கான தபால் சேவையை ரத்து செய்த இந்தியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் - என்ன காரணம்? News Lankasri

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
