சச்சின் - ஷாலினி சேர இவர்தான் காரணம்.. தோழியாக நடித்தவரின் லேட்டஸ்ட் வீடியோ
விஜய்யின் சச்சின் படம் தற்போது ரீரிலீஸ் ஆகி தியேட்டர்களில் நல்ல வசூலை பெற்று வருகிறது. இரண்டு நாட்களில் 4 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் வந்திருக்கிறதாம்.
இந்த படத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். 20 வருடங்களுக்கு முன்பு வந்த படம் என்றாலும் தற்போதும் ரசிகர்கள் கல்லூரி காலத்திற்கு சென்று வந்தது போல இருப்பதாக படம் பார்த்துவிட்டு கூறி வருகின்றனர்.
ராஷ்மி
சச்சின் படத்தில் ஜெனிலியாவின் தோழியாக நடித்த பெண் தற்போது வைரல் ஆகி இருக்கிறார். சச்சின் - ஷாலினி காதல் சேர முக்கிய காரணமாகவும் அந்த தோழி பேசும் வசனங்கள் இருக்கும்.
சச்சின் படத்தில் தன்னை பார்த்துவிட்டு பாராட்டி வரும் அனைவருக்கும் அவர் நன்றி கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
கல்லூரியில் படிக்கும்போது அந்த படத்தில் நடித்த அவர் தற்போது திருமணம் ஆகி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டாராம்.