மூன்று நாட்களில் சச்சின் படம் செய்துள்ள வசூல்.. ரீ ரிலீஸில் இத்தனை கோடியா
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் படம் உருவாகி வருகிறது.
அரசியலுக்கு சென்றுள்ள காரணத்தினால், இதுவே தனது கடைசி படம் என்பதையும் அவர் அறிவித்துள்ளார். இப்படத்தை ஹெச். வினோத் இயக்க பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
சச்சின் ரீ ரிலீஸ்
கடந்த சில ஆண்டுகளாகவே ரீ ரிலீஸ் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் பரவலாகியுள்ளது. கில்லி, தளபதி, பாபா, ஆளவந்தான் ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் தற்போது விஜய்யின் சச்சின் திரைப்படமும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. சென்ற வாரம் திரைக்கு வந்த சச்சின் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வேற லெவலில் இப்படத்தை திரையரங்கில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
வசூல் விவரம்
இந்த நிலையில், ரீ ரிலீஸாகியுள்ள சச்சின் திரைப்படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது.

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
