தலைவா! படத்துக்கு படம் பரவசப்படுத்துகிறாயே!' - சச்சின் புகழாரம்
இந்தியாவை கடந்து உலக அளவில் அறியப்படும் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த்.
இவர் நடித்தாலே படம் சூப்பர் ஹிட் தான் என கூறும் அளவிற்கு உச்சம் தொட்டு உலகம் முழுக்க பெரிய ரசிகர் பட்டாளத்தையே பெற்றுள்ளார்.
தற்போது இவர் நடித்து முடித்து வெளியாக காத்திருக்கும் அண்ணாத்த படத்தை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் 40 வவருடங்களுக்கு மேல் சினிமாவில் வாழ்நாள் சாதனை படைத்ததற்காக இவருக்கு சமீபத்தில் சினிமா துறையில் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாஹேப் பால்கெ விருது வழங்கப்பட்டது.
இதற்காக சமூக வலைதள பக்கங்களில் பலரும் வாழ்த்துக்களை கூறிவந்த வண்ணம் உள்ளனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் தனது த்விட்டேர் பக்கத்தில் வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.
'ஒரு சில நடிகர்களே தனது நடிப்பால் ரசிகர்களை சுண்டி இழுப்பார்கள் அவ்வாறு ஒவ்வொரு முறையும் உங்கள் நடிப்பால் எங்களை படத்துக்கு படம் பரவசப்படுத்துகிறாயே தலைவா' என பதிவிட்டுள்ளார்.
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri