சச்சின் மகளா இது? மாடலிங் செய்திருக்கும் வீடியோ படுவைரல்
கிரிக்கெட் வீரர் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர் தற்போது மாடலிங் செய்ய தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே பெரிய அளவில் பாப்புலராக இருக்கும் அவர் தற்போது மாடலாக மாறி இருக்கும் வீடியோ இணையத்தில் படுவைரல் ஆகி இருக்கிறது.
தற்போது 24 வயதாகும் சாராவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 1.6 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது ஒரு பிரபல துணி பிராண்டின் விளம்பரத்தில் சாரா நடித்து இருக்கிறார். அதன் வீடியோவை அவரே இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருக்கிறார்.
அந்த வீடியோவுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்து இருக்கிறது. மேலும் கமெண்டில் நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அவரை சூப்பர்மாடல் என சிலர் கமெண்ட் செய்து இருக்கின்றனர்.
மேலும் பாலிவுட் நடிகைகள் எல்லாம் ஓரம் போங்க, அடுத்த ஸ்டார் ரெடி எனவும் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். வீடியோ இதோ..