சச்சின் திரைப்படத்தில் நடிகர் விஜய்யால் மாற்றப்பட்ட முக்கிய காட்சி, தயாரிப்பாளர் போட்டுடைத்த உண்மை
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய வசூல் புரிந்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது.
இந்நிலையில் விஜய் நடிப்பில் இயக்குனர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சச்சின். இப்படம் அப்போது சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட திரைப்படங்களுடன் வெளியாகியும் கூட நல்ல வெற்றியை பெற்றது.
மேலும் தற்போது இப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவலை தயாரிப்பாளார் தாணு கூறியுள்ளார், "சச்சின் படத்தின் ப்ரிவியூ காட்சியை விஜய் தம்பியுடன் சேர்ந்து பார்க்கிறேன். படம் முடிந்ததும் விஜய் என்னிடம், ``சார், ஒரு குழந்தை இறந்துடுது.
அதற்கு அடுத்த சீனே நான் பீர் குடிப்பதுபோல இருந்தா அது நல்லாருக்காது. அதை மட்டும் டைரக்டர் கிட்ட சொல்லி மாத்துங்க சார்'' கூறினாராம்.
பிரித்தானியாவிலிருந்து வெளியேற வாக்கெடுப்பு நடத்திய கிராமம்: ஏமாற்றத்தை அளித்துள்ள தகவல் News Lankasri