குக் வித் கோமாளி பிரபலங்கள் புகழ், ஷிவாங்கி ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசனை விட ரசிகர்கள் அதிக ஆர்வமாக எதிர்ப்பார்ப்பது குக் வித் கோமாளி 3வது சீசன்.
மிகவும் கலகலப்பாக கொஞ்சம் சமையல் விஷயங்களுடன் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் நிகழ்ச்சியை ஒளிபரப்பினாலும் பார்க்கும் மக்கள் இருக்கிறார்கள்.
வரும் செப்டம்பர் மாதம் குக் வித் கோமாளி 3வது சீசன் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிகழ்ச்சி குறித்து ஒரு சோகமான செய்தி என்னவென்றால் புகழ் மற்றும் ஷிவாங்கி இந்த 3வது சீசன் முழுவதுமாக வரமாட்டார்களாம்.
காரணம் அவர்கள் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி இருப்பதால் சிறப்பு நிகழ்ச்சிகளில் மட்டும் வருவார்கள் என கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.