பிரபல சீரியல் நடிகைக்கு ரகசியமாக திருமணம் முடிந்தது- ஹனிமூன் போட்டோ வெளியிட்ட நடிகை
சன், விஜய் தொலைக்காட்சிகளில் நிறைய சீரியல்கள் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை சஹானா ஷெட்டி.
அரூபம் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக சஹானா அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.
பட வாய்ப்புகள் வராததால் உடனே சின்னத்திரை பக்கம் வந்தார். அழகு, பகல் நிலவு, சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தற்போது கண்ணான கண்ணே என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதாக கூறப்படுகிறது. சஹானாவுக்கு, அபிஷேக் என்ற மருத்துவருடன் திருமணம் நடந்துவிட்டதாம்.
ஆடி மாதம் வருவதற்குள் திருமணம் முடித்தாக வேண்டும் என்பதால் யாருக்கும் சொல்லாமல் திருமணம் முடித்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
இதற்கு இடையில் ஹனிமூன் புகைப்படங்களை சஹானா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்த வண்ணம் உள்ளார்.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
