நான் ஹீரோவாக அறிமுகமாகிறேனா..? இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் விளக்கம்
சாய் அப்யங்கர்
ஒவ்வொரு காலகட்டத்தையும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவை ஆண்டுள்ளனர். எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், யுவன், ஹாரிஸ், அனிருத் என இப்படி பல பெயர்களை சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு திறமை வாய்ந்த இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள்.

இவர்களின் வரிசையில் தற்போது 2K கிட்ஸ் மனதில் இடம்பிடித்துள்ளவர்தான் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர். கட்சி சேர, ஆச கூட, பவழ மல்லி போன்ற தனது ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த டியூட் திரைப்படத்திற்கு இசையமைத்து நல்ல வரவேற்பை பெற்றார்.
விளக்கம்
இந்த நிலையில், இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது.

இதுகுறித்து சாய் அப்யங்கர் விளக்கமளித்துள்ளார். "அது பொய்யான தகவல். அது உண்மை கிடையாது, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளேன். அதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வரும். நான் நடிக்கவில்லை. சொல்லப்போனால் எனக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று கூட தெரியாது. எனக்கு யதார்த்தமாகவே நடிப்பு வருமென்றால், நான் நடிக்க போயிருப்பேன். ஆனால், எனக்கு நடிப்பில் அவ்வளவு திறமை கிடையாது" என கூறியுள்ளார்.
இதன்மூலம் தான் ஹீரோவாக நடிக்க போகிறேன் என உலா வந்த வதந்திகளுக்கு சாய் அப்யங்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும், அடுத்ததாக இவர் இசையில், கருப்பு, ராக்கா போன்ற பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளிவரவுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.