தன்ஷிகாவை கைது செய்ய வேண்டும் என முன்னாள் மேனேஜர் புகார்.. நடிகை அதிரடியாக வெளியிட்ட அறிக்கை
நடிகை தன்ஷிகா தமிழில் பேராண்மை, பரதேசி, கபாலி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர். அவர் தெலுங்கிலும் தற்போது நடித்து வருகிறார்.
தன்ஷிகா பற்றி அவரது முன்னாள் மேனேஜர் பிரியா என்பவர் தற்போது ட்விட்டரில் புகார் ஒன்றை கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தன்ஷிகா மற்றும் இசையமைப்பாளர் அம்ரிஷ் மனைவி கீர்த்தி அனுஷா ஆகியோர் பணம், சொத்து இருப்பவர்களை குறிவைத்து பின்தொடர்ந்து மிரட்டுகிறார்கள் என பிரியா நடிகை சாய் தன்ஷிகா பற்றி புகார் கூறி உள்ளார்.
பிரியாவின் பெற்றோரை மிரட்டி வருவதால் தான் தன்ஷிகாவை கைது செய்ய வேண்டும் என பிரியா ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு இருக்கிறார்.

தன்ஷிகா விளக்கம்
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு நடிகை தன்ஷிகா விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். 2019ல் தான் பிரியாவை நீக்கிவிட்டதாகவும், அவர் சொல்லும் நபர்கள் யார் என்று கூட எனக்கு தெரியாது என தெரிவித்து உள்ளார்.
இதே போல அவர் தொடர்ந்து பதிவிட்டால் சட்டப்படி சந்திப்பேன் என தன்ஷிகா எச்சரிக்கையும் விடுத்து இருக்கிறார்.
I am here to clarify.@PRO_Priya pic.twitter.com/CRAivHOSKW
— சாய் தன்ஷிகா (@SaiDhanshika) December 3, 2024
18 வயதுக்கு மேற்பட்டோர் சேர்ந்து வாழலாம்; லிவ்-இன் உறவுக்குத் தடையில்லை - உயர்நீதிமன்றம் IBC Tamilnadu
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri