விபத்தில் சிக்கி சுயநினைவு இழந்த நடிகர் சாய் தரம் தேஜ் இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?- புகைப்படத்துடன் அவரே போட்ட பதிவு
தெலுங்கு சினிமாவில் நிறைய இளம் நாயகர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் சாய் தரம் தேஜ்.
இவர் பெரிய ஹிட் படங்கள் கொடுக்கவில்லை என்றாலும் சில நல்ல படங்களை கொடுத்து முக்கிய நடிகராக தான் வலம் வருகிறார்.
பைக் ரைட் செல்வதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் ஹைதராபாத்தில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி இரவு பயணம் செய்துள்ளார். அப்போது ஒரு இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து அவர் பைக்கில் இருந்து கீழே விழுந்து பெரிய விபத்தில் சிக்கினார்.
இதனால் சுய நினைவு இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இப்போது குணமாகி வருகிறாராம். இந்த நேரத்தில் அவர் நடித்த Republic படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த தகவல் அரிந்த சாய் தரம் தேஜ் தனது சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் பதிவிட்டு நன்றியை தெரிவித்துள்ளார்.
Thanks is a small word to express my gratitude for your love and affection on me and my movie “Republic “
— Sai Dharam Tej (@IamSaiDharamTej) October 3, 2021
See you soon pic.twitter.com/0PvIyovZn3
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri