இது நடந்த கண்டிப்பா தளபதிகூட நடிப்பேன்.. நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்
நடிகை சாய் பல்லவி
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
ஆனால், இதற்க்கு முன்பே மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படம் ரசிகர்களிடம் சாய் பல்லவியை கொண்டு சேர்த்துவிட்டது.
தியா படத்தை தொடர்ந்து மாரி 2, என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து வந்த சாய் பல்லவி, சில ஆண்டுகள் இடைவேளைக்கு பின், மீண்டும் கார்கி எனும் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார்.
கேள்விக்கு பதில்
வருகிற ஜூலை 15ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சாய் பல்லவியிடம், 'தளபதி விஜய்யுடன் எப்போது நடிப்பீர்களா' என்று கேள்வி கேட்டகப்பட்டது.
இதற்கு பதிலளித்த சாய் பல்லவி ' நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் கண்டிப்பாக தளபதியுடன் படம் பண்ணுவேன் ' என்று கூறியுள்ளார்.
விரைவில் இவர்கள் இருவரின் கூட்டணியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.