சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடிகை சாய் பல்லவி.. இப்படி நடிக்க, இவர் தான் காரணமாம்
சமீபத்தில் அண்ணன் தங்கை கதைக்களத்தில் வெளிவந்து, மக்கள் மனதில் இடம்பிடித்து வெற்றிபெற்றது அண்ணாத்த. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தெலுங்கில் உருவாகி வரும் வேதாளம் படத்தின் ரீமேக்கிலும், சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தங்கை கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கவுள்ளாராம்.
இவருக்கு தங்கையாக நடிக்க, பிரபல நடிகை சாய் பல்லவி கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதலில் இந்த படத்தில் நடிக்க சாய்பல்லவி தயங்கினாராம். பின், படத்தின் இயக்குனர் திரிவிக்ரம் என்பதால் நடிக்க ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமானத்தில் இருந்து இறங்கி வந்து ஓட்டுநருடன் கைகுலுக்கிய அபுதாபி இளவரசர்: வைரல் வீடியோ News Lankasri