திருமணம் பற்றி வதந்தி.. சாய் பல்லவி கடும் கோபமான பதிவு
சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டார் என ஒரு வதந்தி கடந்த சில தினங்களாக பரவி வருகிறது.
அவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வரும் SK 21 படத்தின் பூஜையில் மாலையுடன் இருக்கும் போட்டோவை crop செய்து சிலர் இப்படி ஒரு வதந்தியை பரப்பி இருக்கின்றனர்.
கோபமான பதிவு
இந்த செய்தி பற்றி தற்போது சாய் பல்லவி கடும் கோபத்துடன் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். "எனக்கு வதந்திகளை பற்றி கவலை இல்லை. ஆனால் அதில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சம்பந்தப்பட்டு இருக்கும்போது நான் பேசியே ஆக வேண்டும்."
"படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட போட்டோவை கிராப் செய்து இப்படி தவறான நோக்கத்தில் பரப்புகிறார்கள். என் படங்கள் பற்றி நல்ல அறிவிப்பை வெளியிட விரும்பிய நேரத்தில் இப்படி வேலையில்லாதவர்கள் செய்யும் விஷயங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.
"இப்படி ஒரு விஷயத்தை செய்வது இழிவானது" என சாய் பல்லவி கூறி இருக்கிறார்.