காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து துணிச்சலாக பேசிய நடிகை சாய் பல்லவி.. வேறு யாரும் செய்த விஷயம்
நடிகை சாய் பல்லவி
தென்னிந்திய அளவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட முன்னணி நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவருடைய நடிப்பில் தெலுங்கில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் விராடா பர்வம். ராணா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

வருகிற ஜூன் 17ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேளைகளில், பல நேர்காணல்களில் பிரபலங்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதில், சமீபத்திய பேட்டி ஒன்றில் காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து நடிகை சாய் பல்லவி பேசியுள்ளார்.
துணிச்சலாக பேசிய சாய் பல்லவி
அவர் கூறியதாவது " காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் ஹிந்து பண்டிதர்கள் கொல்லப்படுவது போன்று காட்சிப்படுத்தப்பது. அண்மையில் இஸ்லாமியர் ஒரு மாட்டை கொண்டு சென்றபோது, ஒருசிலர் அவரை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லும்படி துன்புறுதீனார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கு, தற்போது நடந்துகொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது " என்று துணிச்சலுடன் பேசியுள்ளார் சாய் பல்லவி.

இதற்கு சமூக வலைத்தளத்தில் நடிகை சாய் பல்லவியை ஆதரித்து பலரும் பதிவு செய்து வருகிறார்கள். சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களில் துணிச்சலான கதாபாத்திரங்களை சாய் பல்லவி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu
உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri