ஒரு மருத்துவராக சொல்கிறேன்.. சர்ச்சைக்கு சாய் பல்லவி வீடியோ வெளியிட்டு விளக்கம்

By Parthiban.A Jun 18, 2022 04:00 PM GMT
Report

கடந்த சில தினங்களாக நடிகை சாய் பல்லவி காஷ்மீர் பைல்ஸ் படத்தில் காட்டப்பட்ட சம்பவங்கள் மற்றும் mob lynching சம்பவங்கள் பற்றியும் கூறிய கருத்து பெரிய சர்ச்சை ஆனது. பிரபலங்கள் பலரும் சாய் பல்லவிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர், சிலர் ஆதரவாக பேசினார்கள்.

இந்நிலையில் இது பற்றி சாய் பல்லவி விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது.

நான் முதல்முறையாக ஒரு விஷயம் பற்றி விளக்கம் சொல்லி வீடியோ வெளியிடுகிறேன். நான் எப்போதும் பேசும்முன் இரண்டு முறை யோசித்து விட்டு தான் பேசுவேன்.

நான் இடது பக்கமா இல்லை வலது பக்கமா என கேட்டார்கள்.. நான் எப்போதும் நடுநிலையாக தான் இருக்கிறேன். முதலில் நல்ல மனிதராக இருக்க வேண்டும்.

அந்த கேள்விக்கு என்னை பாதித்த இரண்டு சம்பவங்கள் பற்றி கூறினேன். காஷ்மீரில் நடந்த இன படுகொலையை நியாயப்படுத்தி நான் பேசவில்லை. அதே போல mob lynching சம்பவங்களையும் பற்றி குறிப்பிட்டேன்lynching வன்முறை எந்த விதத்தில் இருந்தாலும் தவறு தான். அது மதத்தின் பெயரால் நடப்பது பாவம் என தான் நான் குறிப்பிட்டேன்.

ஒரு மருத்துவராக சொல்கிறேன்.. சர்ச்சைக்கு சாய் பல்லவி வீடியோ வெளியிட்டு விளக்கம் | Sai Pallavi Clarifies On Kashmir Mob Lynching

எல்லா உயிரும் சமம்

அடுத்தவரின் உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. ஒரு மருத்துவராக எனக்கு எல்லா உயிரும் சமம், எல்லா உயிரும் முக்கியம்.

ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு சென்று 'All Indians are my brothers and sisters' என 15 வருடமாக சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. கலாச்சாரம், ஜாதி, மதம் அடிப்படையில் வேற்றுமை பார்ப்பது கூடாது.

அந்த பேட்டியில் நான் நடுநிலையாக தான் பேசினேன். ஆனால் நான் பேசியதை அப்படியே வேறு அர்த்தத்தில் எடுத்துக்கொண்டார்கள்.

நான் அப்படி என்ன தவறு செய்தேன் என கடந்த சில தினங்களாக எனக்குள்ளே கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு ஆதரவாக பேசிய எல்லோருக்கும் நன்றி என அவர் கூறி உள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US